இந்தியா
காற்று மாசுபாடு

டெல்லியில் காற்று மாசு உயர்வு எதிரொலி - பள்ளிகள் மீண்டும் மூடல்

Published On 2021-12-02 23:26 GMT   |   Update On 2021-12-02 23:26 GMT
தலைநகர் டெல்லியில் தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பிறகு காற்று மாசின் அளவு அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
புதுடெல்லி:

காற்று மாசு காரணமாக கடந்த மாதம் 13-ம் தேதியில் இருந்து மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் கடந்த 29-ம் தேதி மீண்டும் செயல்பட தொடங்கின.

இந்நிலையில், காற்று மாசு அதிகரித்ததால், டெல்லியில் அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் கூறுகையில், காற்றின் தரம் அதிகரிக்கும் என்ற கணிப்பில் பள்ளிகளை மீண்டும் திறந்தோம். ஆனால், இப்போது காற்றின் தரம் மிகவும் மோசமாகி விட்டது. எனவே, மறு உத்தரவு வரும்வரை அனைத்துப் பள்ளிகளும் 3-ம் தேதி முதல் மூடப்படுகின்றன என தெரிவித்தார்.
Tags:    

Similar News