கார்
பி.எம்.டபில்யூ எக்ஸ்3 டீசல் கார்

மணிக்கு 213 கி.மீ அதிகபட்ச வேகம் செல்லும் டீசல் கார்... இந்தியாவில் அறிமுகம் செய்த பி.எம்.டபில்யூ

Published On 2022-02-17 12:21 GMT   |   Update On 2022-02-17 12:21 GMT
இந்த எக்ஸ்3 கார் பெட்ரோல் ட்ரிமில்லும் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபில்யூ எஸ்.யூ.வி வகை எக்ஸ்3 டீசல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் சென்னையில் அமைந்துள்ள பி.எம்.டபில்யூ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. 

இந்த புதிய பி.எம்.டபில்யூ எக்ஸ்3 டீசல் கார், சக்தி வாய்ந்த டீசல் இன்ஜினுடன் ட்வின் பவர் டர்போ டெக்னாலஜி கொண்டுள்ளது. 2 லிட்டர் 4 சிலிண்டர் கொண்ட இந்த இன்ஜின் 140 kw/ 190 hp-ஐ தயாரிக்கும் வல்லமை கொண்டது. மேலும் 1,750 – 2,500 rpm-ல் 400 Nm அதிகபட்ச டார்க்கை உருவாக்கக்கூடியது.

இதன் மூலம் இந்த கார் வெறும் 7.9 நொடிகளில் 0-100 மணிக்கு கி.மீ வேகத்தை எட்டும் வல்லமை கொண்டது. மேலும் மணிக்கு 213 கி.மீ அதிகபட்ச வேகத்தில் செல்லக்கூடியது.

இந்த கார் மினரல் ஒயிட், பைதானிக் ப்ளூ, ப்ரூக்ளின் க்ரே, சோபிஸ்டோ க்ரே, பிளாக் சேப்பையர், கார்பன் ப்ளாக் ஆகிய வண்ணங்களில் வருகிறது.



இந்த காருடன் ‘பி.எம்.டபில்யூ சர்வீஸ் இங்கிளூசிவ்’ மற்றும் ‘பி.எம்.டபில்யூ சர்வீஸ் இங்கிளூசிவ் பிளஸ்’என்ற கம்பெனி சேவையையும் வழங்கப்படுகிறது. இந்த சேவையில் கன்டிஷன் பேஸ்டு சர்வீஸ்கள் மற்றும் மெயின்டனன்ஸ்கள் 3 வருடங்களுக்கு/ 40,000 கி.மீ வரையில் இருந்து 10 வருடங்களுக்கு/ 2 லட்சம் கி.மீ வரை வழங்கப்படுகிறது. 

இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.65.50 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்3 கார் பெட்ரோல் ட்ரிமில்லும் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News