செய்திகள்
சீனித்தம்பி யோகேஸ்வரன் எம்பி

மீனவர் பிரச்சனையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு- கொடைக்கானலில் இலங்கை எம்.பி. பேட்டி

Published On 2019-09-07 04:22 GMT   |   Update On 2019-09-07 04:22 GMT
மீனவர்கள் சிறைபிடிப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க இலங்கை அரசும் இந்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முறையான முடிவை பெற்று தர வேண்டும் என்று சீனித்தம்பி யோகேஸ்வரன் எம்பி தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் நேற்று இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டு வருகிறேன். கொடைக்கானல் அழகான பகுதி என்றும் இந்திய நாட்டிற்கும் இலங்கை நாட்டிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.

மேலும் இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு அமைதியான நிலைமை காணப்பட்டது. கடந்த ஏப்ரல் 21-ந் தேதி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினால் இலங்கையில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துவ தமிழ் மக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும் சுற்றுலா விடுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது, இந்திய அரசு புலனாய்வு பிரிவினர் மூலம் ஏப்ரல் 4-ந் தேதி இலங்கை அரசாங்கத்திற்கு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படும் அறிகுறிகள் உள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய அரசு புலனாய்வு பிரிவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும் பொது இலங்கை ராணுவம் சிறைபிடித்து செல்லும் நிலை தற்பொழுது குறைந்துள்ளதாகவும், இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க இலங்கை அரசும் இந்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முறையான முடிவை பெற்று தர வேண்டும்.

மேலும் இலங்கையில் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசாங்கம் சில மீள் குடியேற்ற நடவடிக்கைக்கு முயற்சி செய்கிறது. வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் மக்கள் குடியேறும் நிலை உள்ளவர்களாக இருகின்றார்கள். ஆனால் அவர்களது பகுதி ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் குடியேறுவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆர்வம் காட்டிவருகிறது. தமிழகத்தில் வாழும் இலங்கை மக்களை மீட்டு இலங்கை கொண்டு சென்று குடியேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News