ஆட்டோமொபைல்

புத்தம் புதிய பஜாஜ் அவென்ஜர் 220: விரைவில் வெளியிட பஜாஜ் ஆட்டோ திட்டம்

Published On 2017-12-23 11:05 GMT   |   Update On 2017-12-23 11:05 GMT
இந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ இந்தியாவில் புத்தம் புதிய அவென்ஜர் 220 மாடலை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

இந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ இந்தியாவில் புத்தம் புதிய அவென்ஜர் 220 மாடல் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. புதிய அவென்ஜர் 220 மாடல் ஸ்ட்ரீட் மற்றும் க்ரூஸ் என இரண்டு வேரியண்ட்களில் வெளியிடப்படும் என்றும் இவை ஜனவரி 2018-இல் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் அவென்ஜர் ஸ்டிரீட் மற்றும் க்ரூஸ் மாடல்களில் பல்வேறு காஸ்மெடிக் அப்கிரேடுகள் செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும் இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என கூறப்படுகிறது.

அந்த வகையில் புதிய அவென்ஜர் 220 மாடலில் தற்போது விற்பனை செய்யப்படும் மாடலில் உள்ள பாகங்களே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சுசுகி அறிமுகம் செய்துள்ள இன்ட்ரூடர் 150 மாடலுக்கு போட்டியாக பல்வேறு அம்சங்கள் புதிய மாடலிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இத்துடன் புதிய மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. இதேபோன்று ஃபியூயல் டேன்க் டிஸ்ப்ளேவும் டிஜிட்டல் மற்றும் அதிநவீன தோற்றமும் பெரிய விண்ட்ஸ்கிரீன் மற்றும் ஸ்ப்லிட் சீட் செட்டப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய அவென்ஜர் மாடலில் சிங்கிள் சேனல் ABS மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News