ஆன்மிகம்
விநாயகர்

விநாயகர் நிவேதனம்

Published On 2019-08-27 08:59 GMT   |   Update On 2019-08-27 08:59 GMT
விநாயகருக்கு படைக்கும் நிவேதனப் பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கி இக்கிறது. அது என்ன என்பதைத் தெரிந்து படைத்தால் வாழ்க்கை வளமாகும்.
விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப் பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கி இக்கிறது. அது என்ன என்பதைத் தெரிந்து படைத்தால் வாழ்க்கை வளமாகும்.

மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப் படுகிறது.

கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படு கிறது.

அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
Tags:    

Similar News