செய்திகள்
பணியிடை நீக்கம்

டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்ற ஊழியர் பணியிடை நீக்கம்

Published On 2021-09-23 08:14 GMT   |   Update On 2021-09-23 08:14 GMT
விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு மதுவை விற்பனை செய்யும் கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தியாகராஜன் கூறினார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தியாகராஜன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இதில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கடை எண் 3601-ல் விற்பனையாளராக பணியாற்றி வந்த எம்.அர்ச்சுனன் மதுபானங்களை அடக்க விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். மேலும், நுகர்வோரிடம் அலட்சியமாக பேசி உள்ளார். இதனால் விற்பனையாளர் அர்ச்சுனன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விலை பட்டியலை நுகர்வோர் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும். விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு மதுவை விற்கக்கூடாது. இதை மீறி செயல்படும் கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News