ஆன்மிகம்
கொட்டாரத்தில் சந்தன மாரியம்மன் கோவிலில் சித்திரை விஷூ விழா

கொட்டாரத்தில் சந்தன மாரியம்மன் கோவிலில் சித்திரை விஷூ விழா

Published On 2021-04-15 05:10 GMT   |   Update On 2021-04-15 05:10 GMT
கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தில் உள்ள சந்தனமாரி அம்மன் கோவிலில் சித்திரை விஷூ திருவிழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தில் உள்ள சந்தனமாரி அம்மன் கோவிலில் சித்திரை விஷூ திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருதல், கனி காணும் நிகழ்ச்சி, பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டது.

மாலையில் வடக்கு வாசல் மயான சுடலைமாடசாமி கோவிலில் ருத்ரபூமி பூஜை, சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா ஆகியவை நடந்தது.

அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் மாடன் பிள்ளை தர்மம் முத்தாரம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் காலை கனி காணும் நிகழ்ச்சியும், அம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியோடு சாமி தரிசனம் செய்தனர்.

அஞ்சுகிராமம் அழகிய விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. காலையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சன்னதி அருகில் செல்லாமல் தூரத்தில் இருந்தே கனி காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர். காணிமடம் யோகிராம்சுரத்குமார் மந்திராலயத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி கனி காணும் நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் நடந்தது. கொரோனா நோயில் இருந்து மக்கள் சுகமாக வாழவும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
Tags:    

Similar News