சமையல்
ஜவ்வரிசி பால் கஞ்சி

புரதம் நிறைந்த ஜவ்வரிசி பால் கஞ்சி

Published On 2022-02-12 05:24 GMT   |   Update On 2022-02-12 05:24 GMT
ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி - அரை கப்,
சர்க்கரை - 2 டீஸ்பூன்,
பால் - ஒரு கப்,
ஏலக்காய் - சிறிது.

செய்முறை:

ஜவ்வரிசியை வாணலியில் போட்டு, நன்கு பொரியும் வரை வறுக்கவும்.

பிறகு மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

பொடித்த மாவுடன், சிறிது கொதிக்கும் நீர் விட்டுக் கரைத்து, அத்துடன் பால், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து பரிமாறவும்.

தோலுக்கு பளபளப்பைக் கொடுக்கும் இந்தக் கஞ்சி.

Tags:    

Similar News