ஆன்மிகம்
வடலூர் சத்தியஞான சபையில் வள்ளலார் அவதார தின விழா

வடலூர் சத்தியஞான சபையில் வள்ளலார் அவதார தின விழா

Published On 2020-10-06 03:39 GMT   |   Update On 2020-10-06 03:39 GMT
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞானசபை, சத்திய தருமச்சாலை, வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும் வள்ளலாரின் 198-வது அவதார தின விழா நடைபெற்றது.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞானசபை, சத்திய தருமச்சாலை, வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும் வள்ளலாரின் 198-வது அவதார தின விழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி காலை 6 மணிக்கு சன்மார்க்க கொடி தருமச்சாலையில் ஏற்றப்பட்டது, இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து தருமச்சாலையில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. தருமச்சாலை மேடையில் வழக்கமாக நடைபெறும் சன்மார்க்க சொற்பொழிவுகள், வரலாற்று வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.

விழாவையொட்டி சத்தியஞான சபையிலும், சத்திய தருமச்சாலையிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது, இதற்கான ஏற்பாடுகளை தெய்வநிலைய நிர்வாக அதிகாரி சரவணன் மற்றும் பார்வதிபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News