செய்திகள்
கோப்புபடம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதிர்வு தொகை பெற்று கொள்ளலாம்

Published On 2021-07-28 08:15 GMT   |   Update On 2021-07-28 08:15 GMT
குழந்தைகள் வயது 18 பூர்த்தியாகி இருந்தால் முதிர்வு தொகையை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்:

சமூக நலத்துறையின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 18 வயது பூர்த்தியானவர்கள் முதிர்வு தொகையை பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் குழந்தைகள் வயது 18 வயது பூர்த்தியாகி இருந்தால் முதிர்வு தொகையை பெற்று கொள்ளலாம்.

வைப்பு தொகை ரசீது, பாஸ்போர்ட் அளவு போட்டோ, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பள்ளி இடமாற்று சான்று, பயனாளி பெயரில் உள்ள வங்கி கணக்கு புத்தகம், ஒரு ரூபாய் ரெவன்யூ ஸ்டாம்ப் ஆகியவற்றுடன் ஒன்றிய அலுவலகத்தை அணுகலாம். அங்குள்ள சமூகநல விரிவாக்க அலுவலகத்தை அணுகி முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News