வழிபாடு
செங்கோலுடன் முருகப்பெருமான்-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்: அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்

Published On 2022-03-21 05:34 GMT   |   Update On 2022-03-21 05:34 GMT
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பட்டாச்சாரியார்கள் எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

இதனையொட்டி கோவிலுக்குள் ஆறுகால் மண்டபம் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தது.இந்த நிலையில் பச்சை குதிரை வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் நகரில் உலா வந்து ஆறுகால் மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு அக்கினி வளர்க்கப்பட்டு பூஜை நடைபெற்றது. மேலும் கீரிடத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

இந்தநிலையில் மேளதாளங்கள் முழங்க, சர்வ மந்திரங்களுடன் முருகப்பெருமானின் சிரசில் தங்கக் கிரீடமும், சேவல் கொடியும் சாத்தப்பட்டது. மேலும் முருகப்பெருமானின் திருக்கரத்தில் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் சூடி பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.அவை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலுக்குள் திரளாக கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி மிகுந்த பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் 12-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) பகல் 12.45 மணி முதல் 1.15 மங்கள வாத்தியங்கள் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க முருகப்பெருமான், தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்காக கோவிலுக்குள் உள்ள 6 கால் மண்டபம், திருவாட்சி மண்டபம் வாசனை கமழும் மலர்களாலும், மின்னொளிகளாலும் அலங்கரிக்கப்பட்டு தயாராக உள்ளது.

இந்த நிலையில அதிகாலை 5 மணி அளவில் முருகப்பெருமான் தெய்வானைக்கு மணக்கோல அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது. இதனையடுத்து காலை 6 மணியளவில மேளதாளங்களுடன் கோவிலிலிருந்து சன்னதி தெரு வழியாக பசுமலை மூலக்கரை அருகே உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு செல்கிறார்.

இதேசமயம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் புறப்பட்டு திருப்பரங்குன்றம் சந்திப்பு மண்டபத்திற்கு வருகின்றனர்.அங்கு முருகப்பெருமான் தனது திருமணத்திற்கு வருகை தரும் தன் பெற்றோர்களான சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மனை வரவேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

கோவிலுக்குள் ஒடுக்க மண்டபத்தில் கண்ணூஞ்சல் நடக்கிறது.பின்பு திருமணம் கோலாகலமாக நடக்கிறது.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (22-ந் தேதி) தேரோட்டம் நடக்கிறது.
Tags:    

Similar News