செய்திகள்
கொரோனா பரிசோதனை

ஆரணி பெரிய கடைவீதியில் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-07-17 12:32 GMT   |   Update On 2021-07-17 12:32 GMT
ஆரணி பெரிய கடைவீதியில் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஆரணி:

ஆரணி நகராட்சி நிர்வாகமும், எஸ்.வி. நகரம் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதா தலைமையில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜவிஜயகாமராஜ் முன்னிலையில் டாக்டர் முரளி மேற்பார்வையில் ஆரணி பெரிய கடை வீதியில் உள்ள காய்கறி வியாபாரிகள், பெட்டி கடை வியாபாரிகள், செல்போன் கடை மற்றும் பல்வேறு வியாபாரம் செய்வோருக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.

நகராட்சி களப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று யாருக்கேனும் காய்ச்சல் உள்ளதா, காய்ச்சல் வந்தவர்கள் தற்போது எப்படி உள்ளார்கள்? என விவரங்களை கேட்டறிந்து, அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் அறிவிப்பு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறார்கள். காய்ச்சல் உள்ளவர்களை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News