ஆட்டோமொபைல்

இரண்டு புதிய நிறங்களில் டிவிஎஸ் என்டார்க்

Published On 2018-04-15 08:47 GMT   |   Update On 2018-04-15 08:47 GMT
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது என்டார்க் ஸ்போர்ட் ஸ்கூட்டர் மாடலை இரண்டு வித புதிய நிறங்ளில் அறிமுகம் செய்துள்ளது.
புதுடெல்லி:

டிவிஎஸ் மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்த என்டார்க் 125 சிசி ஸ்போர்ட் ஸ்கூட்டரை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது.

மெட்டாலிக் புளு மற்றும் மெட்டாலிக் கிரே என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கும் என்டார்க் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்திருந்தது. முன்னதாக டிவிஎஸ் என்டார்க் 125 மேட் எல்லோ, மேட் கிரீன், மேட் ரெட் மற்றும் மேட் வைட் நிறங்களில் வெளியிடப்பட்டு இருந்தது.

இரண்டு புதிய நிறங்களிலும் முன்பக்க ஃபென்டர், ஹெட்லைட் கௌல்களில் கருப்பு நிற பேனல் செய்யப்பட்டுள்ளது. புதிய நிற மாடல்களுக்கென புதிய விலை அறிவிக்கப்படவில்லை. அந்த வகையில் புதிய நிற ஸ்கூட்டர்களையும் பயனர்கள் முந்தைய மாடல்களின் விலையிலேயே வாங்கிட முடியும்.



இளைஞர்களை கவரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய என்டார்க் 125 ஸ்கூட்டர் சவுகரியமாகவும், பாதுகாப்பானதாக இருக்கும் படி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஸ்டெல்த் விமான வகைகளை தழுவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பும் டி.வி.எஸ். கிராஃபைட் கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. 

இத்துடன் பகலில் எரியும் எல்.இ.டி., சிக்னேச்சர் ஸ்டைலிங் கொண்ட எல்இடி டெயில் லேம்ப் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. புதிய டி.வி.எஸ். ஸ்கூட்டரில் ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் 125சிசி CVTi Revv ரக இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 9.27 பி.ஹெச்.பி. பவர் @7500 ஆர்.பி.எம். மற்றும் 10.4 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கிறது. 

டி.வி.எஸ். என்டார்க் அதிகபட்சமாக மணிக்கு 95 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் ஆட்டோ சோக், இன்டெலிஜண்ட் இக்னிஷன் சிஸ்டம், ஸ்ப்லிட் இன்டேக் வடிவமைப்பு, ஃபோம்-ஆன்-பேப்பர் ஃபில்ட்டர் மற்றும் கம்பஷன் சேம்பருக்கென பிரத்யேக ஆயில் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.



புதிய டி.வி.எஸ். என்டார்க் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக ஸ்மாரட் கனெக்ட் தொழில்நுட்பம் இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து கொண்டு நேவிகேஷன் அசிஸ்ட் வழங்குகிறது. நேவிகேஷன் மூலம் வழிகளை எல்.சி.டி. ஸ்கிரீன் மூலம் பார்க்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் 55 பிரத்யேக அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. இதில் அதிகபட்ச வேகம், லேப் டைமர், போனின் பேட்டரி அளவு, பார்க்டு லொகேஷன் அசிஸ்ட், சராசரி வேகம் மற்றும் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்ட்ரீட் மோட் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும். இத்துடன் ஸ்மார்ட்போன்களில் வரும் அழைப்புகளை மேற்கொள்வோரின் விவரங்கள், ஆட்டோ-ரிப்ளை அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது.

பிரீமியம் ஸ்கூட்டரில் வெளிப்புற ஃபியூயல் ஃபில்லர் கேப், இன்ஜின் கில் ஸ்விட்ச், பாஸ் பை ஸ்விட்ச், பார்க்கிங் பிரேக், டூயல்-சைடு ஹேன்டிள் லாக், யு.எஸ்.பி. மொபைல் போன் சார்ஜர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமசங்களை பொருத்த வரை புதிய ஸ்கூட்டரில் அகலமான 110/80-12 டியூப்லெஸ் டையர்கள் மற்றும் ஸ்போர்ட் தோற்றம் வழங்கும் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் டி.வி.எஸ். என்டார்க் 125 விலை ரூ.58,750 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News