தொழில்நுட்பம்
பேஸ்புக் அவதார்

இந்தியாவில் பேஸ்புக் அவதார்ஸ் அம்சம் அறிமுகம்

Published On 2020-07-01 07:08 GMT   |   Update On 2020-07-01 07:08 GMT
பேஸ்புக் நிறுவனம் அவதார்ஸ் எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த அம்சம் இந்தியாவுக்கென கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது.


பேஸ்புக் நிறுவனத்தின் அவதார்ஸ் அம்சம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அவர்களது உருவத்தின் கார்டூன் போன்ற வடிவத்தை உருவாக்க முடியும். பயனர்கள் பேஸ்புக் அவதார்ஸ் சேவையில் கிடைக்கும் வெவ்வேறு முகங்கள், தலைமுடி அலங்காரங்கள் மற்றும் உடை உள்ளிட்டவற்றை தேர்வு செய்ய முடியும்.

இந்த அம்சம் இந்தியாவுக்கென பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். அவதார்ஸ் கொண்டு பயனர்கள் அவர்களது டிஜிட்டல் உருவத்தை வடிவமைத்து, அதில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு பகிர்ந்து கொள்ளலாம்.

பயனர்கள் உருவாக்கும் அவதார்களை பேஸ்புக் கமென்ட், ஸ்டோரீஸ், ப்ரோபைல் படம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் சாட் விண்டோ உள்ளிட்டவற்றில் பயன்படுத்தலாம். இத்துடன் இவற்றை வாட்ஸ்அப் சாட்களிலும் பகிர்ந்து கொள்ள முடியும். அவதார்ஸ் அம்சத்தை பயனர்கள் ஃபேஸ்புக் செயலியின் புக்மார்க்ஸ் பகுதியில் இயக்க முடியும்.

தற்தமயம் பேஸ்புக் அவதார் அம்சம் ஆண்ட்ராய்டு மெசஞ்சர் செயலியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அம்சம் ஆப்பிள் ஐஒஎஸ் பதிப்பிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News