செய்திகள்
சம்பங்கி பூ

பவானிசாகர் பகுதியில் சம்பங்கி பூ தொடர் விலை வீழ்ச்சி

Published On 2021-04-05 15:30 GMT   |   Update On 2021-04-05 15:30 GMT
பவானிசாகர் பகுதியில் சம்பங்கி பூ விலை தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
பவானிசாகர்:

பவானிசாகர், தொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், எரங்காட்டூர், அக்கரைதத்தப்பள்ளி, கொத்தமங்கலம், கெஞ்சனூர், பகுத்தம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50- க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சம்பங்கி பூ பயிரிட்டுள்ளனர்.

பவானிசாகர் பகுதியில் கடந்த மாதம் இறுதியில் சம்பங்கி பூ விலை கிலோ ரூ.140 வரை விற்பனையானது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பவானிசாகர் பகுதியில் சம்பங்கி பூ விலை குறைந்து வருகிறது. கடந்த 2-ந் தேதி சம்பங்கி பூ கிலோ ஒன்று ரூ.50 ஆக இருந்தது.

நேற்று முன்தினம் சம்பங்கி பூ கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.40-க்கு விற்பனை ஆனது. நேற்று சம்பங்கி பூ மேலும் ரூ.10 குறைந்து கிலோ ஒன்று ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி பூ விலை தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
Tags:    

Similar News