ஆன்மிகம்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் வருஷாபிஷேக விழா

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் வருஷாபிஷேக விழா

Published On 2021-09-17 06:59 GMT   |   Update On 2021-09-17 06:59 GMT
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் மூலவர் சிவசுப்பிரமணிய சாமி, நடராஜர், சென்னகேசவ பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் சன்னதியில் புனித நீரால் கலசஅபிஷேகம் செய்யப்பட்டது.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு ஆவணி மாதம் நூறு ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வருஷாபிஷேக விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டும் விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கலச ஸ்தாபனம், சுப்பிரமணியர் திரிசதி ஹோமம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து மூலவர் சிவசுப்பிரமணிய சாமி, நடராஜர், சென்னகேசவ பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் சன்னதியில் புனித நீரால் கலசஅபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், சோடச உபசாரம், வேத பாராயணம், திருமுறை பாராயணம், திருப்புகழ் பாராயணம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து மாலை வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சாமி சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தார். இதில் தர்மபுரியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News