செய்திகள்
கைது

தூத்துக்குடியில் கடத்தப்பட்ட பள்ளி மாணவி மீட்பு- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2021-06-07 10:52 GMT   |   Update On 2021-06-07 10:52 GMT
இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி சென்றது யார்? அவர் எங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளார்? என விசாரணை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியை சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அந்த மாணவி தனது வீட்டின் முன்பு நின்று விளையாடி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் சிறுமியை கடத்தி சென்றார்.

இதையறிந்த அவரது பெற்றோர் சிறுமியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது அவரை கடத்தி சென்று குடோனில் அடைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி சென்றது யார்? அவர் எங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளார்? என விசாரணை மேற்கொண்டனர்.

அதில் சிறுமியை கடத்தி சென்றது தூத்துக்குடி தாமோதரன்நகரை சேர்ந்த விமல் (வயது 27) என்பதும், மாணவி அடைத்து வைக்கப்பட்டுள்ள இடமும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுதியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து விமல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News