ஆன்மிகம்
அம்மன்

வித்தியாசமான அம்மன் திருக்கோலம்

Published On 2021-09-24 07:46 GMT   |   Update On 2021-09-24 07:46 GMT
பெண்கள் மத்தியில் அம்மன் வழிபாடு சிறந்ததாக கருதப்படுகிறது. வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மனைப் பற்றி அறிந்துகொள்வோம்.
* காரைக்குடியில் உள்ள கொப்புடையம்மன் கோவிலில், மூல விக்கிரகம் கிடையாது. உற்சவர் விக்கிரகமே மூலவராக வழிபடப்படுகிறது.

* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் அருகில் உள்ளது பராஞ்சேரி. இங்கு பள்ளிகொண்ட கோலத்தில் துர்க்கை அம்மனை தரிசிக்கலாம்.

* திருவெண்காட்டில் பிரம்மனுக்கு ஞானம் அருளும் சக்தியாக, ‘பிரம வித்யாம்பிகை’ என்ற பெயரில் அம்பாள் வீற்றிருக்கிறார்.

* மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் துர்க்கை அம்மனுக்கு தனிக் கோவில் அமைந்துள்ளது.

* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில், எட்டுக் கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் உள்ள துர்க்கை அம்மனை தரிசனம் செய்யலாம்.

* திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் பெரியநாயகி அம்மன் சன்னிதி மலை அடிவாரத்திலும், கனககிரீஸ்வரர் சன்னிதி மலைக்கு மேலேயும் அமைந்திருக்கிறது.

* கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மாசாணியம்மன் கோவிலில், சயன கோலத்தில் அம்மன் காட்சி தருகிறாள்.

* திருவாரூர் தியாகராஜர் கோவிலில் முருகப்பெருமானின் தலையை தடவிய நிலையில் நீலோத்பலாம்பாளையும், கால்மேல் கால்போட்ட கோலத்தில் கமலாம்பாளையும் தரிசிக்கலாம்.

* திருவெண்காட்டில் உள்ள புதன் தலத்தில், திருஞானசம்பந்தரை இடுப்பில் தூக்கி வைத்த நிலையில் பெரியநாயகி அம்மன் காணப்படுகிறாள்.

* காஞ்சிபுரத்தில் உள்ள ஆதி காமாட்சி ஆலயத்தில், லிங்கத்தின் பாணத்தில் அம்மன் வடிவம் காணப்படுகிறது. இதனை ‘அர்த்தநாரீஸ்வர லிங்கம்’ என்கிறார்கள்.

* கும்பகோணம் அய்யவாடி பிரத்தியங்கிரா ஆலயத்தில், சிம்ம முகத்துடன் அம்மன் அருள்பாலிக்கிறார்.
Tags:    

Similar News