ஆன்மிகம்
சிவசூரியபெருமான் கோவிலில் திருவாவடுதுறை ஆதீனம் வழிபாடு செய்தபோது எடுத்தபடம்.

சூரியனார் கோவில் சிவசூரியபெருமான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

Published On 2021-11-15 03:56 GMT   |   Update On 2021-11-15 03:56 GMT
சூரியனார் கோவில் சிவசூரியபெருமான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவில் கிராமத்தில் சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. நவக்கிரகங்களுக்கு என்று பிரதானமாக அமைந்துள்ள இக்கோவிலில் உஷா தேவி, சாயா தேவியுடன் சிவசூரிய பெருமான் மூலவராக அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் சூரியனை பார்த்தவாறு குருபகவான் அமைந்துள்ளது சிறப்பம்சம் ஆகும்.

மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குருபகவான் நேற்று முன்தினம் மாலை பெயர்ச்சி அடைந்ததையொட்டி இக்கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது.

இதில் குருபகவானுக்கு 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரை கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News