ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் கோவிலுக்கு பக்தர்கள் நெய் காணிக்கையாக செலுத்தலாம்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

Published On 2021-11-13 07:15 GMT   |   Update On 2021-11-13 07:15 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த காலங்களில் தீபம் ஏற்ற பயன்படுத்தப்பட்ட 3½ அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை மெருகு ஏற்றும் பணியும் நடந்து வருகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 11 -ந் தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 19-ந்தேதி மலையில் மகாகார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி சுமார் 150 அடி உயரத்தில் மலையில் உள்ள உச்சிபிள்ளையார் கோவில் வளாகத்தில் தீபமேடை தயார்படுத்தும் பணி நடந்துவருகிறது.

மேலும் கடந்த காலங்களில் தீபம் ஏற்ற பயன்படுத்தப்பட்ட 3½ அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை மெருகு ஏற்றும் பணியும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தீபம் ஏற்றக்கூடிய உபகரணமான 150 மீட்டர் கடா தூணி, 5 கிலோ கற்பூரம், 350 லிட்டர் நெய் ஆகியவை தயார்படுத்தி வருகின்றனர். கோவிலுக்கு நெய் டின்கள் உபயமாக, காணிக்கையாக வழங்கிட நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

கோவில் உள்துறை அலுவலகத்தில் நெய் டின்கள் வழங்கி உரிய காணிக்கை ரசீது பெற்றுக்கொள்ளலாம் என்று கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News