செய்திகள்
சீமான்

தமிழகத்தில் பா.ஜனதா தனித்து போட்டியிட தயாரா?- சீமான் கேள்வி

Published On 2021-02-21 04:30 GMT   |   Update On 2021-02-21 04:30 GMT
பாரதிய ஜனதா நாம் தமிழர் கட்சியை போல் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயாரா? என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி:

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென் இந்தியாவில் பாரதிய ஜனதா கர்நாடகம் வரை வந்து விட்டது. தற்போது அதிகாரத்தில் உள்ளதால் தமிழகம், புதுச்சேரியை குறி வைக்கிறது. முதலில் புதுச்சேரியை கைப்பற்ற நினைக்கிறது.

இதற்காகவே பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். அங்குள்ள முதல்வர் நாராயணசாமியை இதுவரை கிரண்பேடியை வைத்து செயல்பட விடாமல் தடுத்து வந்தனர். தேர்தல் நேரத்தில் துணைநிலை ஆளுநரை மாற்றி எப்படியாவது ஆட்சி அமைக்க நினைக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதாவுக்கு இடையே எந்த வேறுபாடும் கிடையாது. கட்சிதான் வெவ்வேறு. ஆனால் வெளியுறவு, பொருளாதாரம், பாதுகாப்பு என எல்லாவற்றிலும் கொள்கை ஒன்று தான். இந்தியாவை ஆளக்கூடிய பா.ஜனதா, நாம்தமிழர் கட்சியை போல் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயாரா?

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என தமிழக முதல்-அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கலவரத்தில் அதிக வழக்குகள் போடப்பட்டது நாம் தமிழர் கட்சியினர் மீதுதான். எனவே அதனை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News