செய்திகள்
முககவசம்

திருச்சிற்றம்பலம் கடைவீதியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2021-07-06 10:31 GMT   |   Update On 2021-07-06 10:31 GMT
திருச்சிற்றம்பலம் கடைவீதியில் வணிக நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருச்சிற்றம்பலம்:

கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு தஞ்சை மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. அதனை செயல்படுத்தும் பொருட்டு, திருச்சிற்றம்பலம் கடைவீதியில் நேற்று வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் வணிக நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் திருச்சிற்றம்பலம் சரக வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் திருச்சிற்றம்பலம் போலீசார் ஈடுபட்டனர்.

இதேபோல் பூக்கொல்லை கடைவீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்றவர்களை பேராவூரணி தாசில்தார் ஜெயலெட்சுமி, மண்டல துணை தாசில்தார் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் முக கவசம் அணியாமல் பயணம் செய்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
Tags:    

Similar News