ஆன்மிகம்
நவக்கிரகங்களை சுற்றுவது எப்படி?

நவக்கிரகங்களை சுற்றுவது எப்படி?

Published On 2019-11-06 09:05 GMT   |   Update On 2019-11-06 09:05 GMT
நவக்கிரகங்களை சுற்றும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அது என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். ஏனெனில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை.

எனவே இந்த ஏழு கிரகங்களை வலமாகச் சுற்ற வேண்டும். ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே அடுத்த இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்ற வேண்டும். சிலர் அப்படி சுற்ற தேவையில்லை என்கிறார்கள்.

மொத்தம் ஒன்பது முறை நவக்கிகரங்களை சுற்ற வேண்டும் எல்லா தெய்வங்களையும் வணங்கி முடித்துவிட்டு கடைசியாக நவக்கிரகங்களை சுற்றி வருவது தான் முறையாகும். இந்த ஐதீகம் தான் நலத்தைத் தரும்.
Tags:    

Similar News