சமையல்
பீட்ரூட் - கேரட் சூப்

வைட்டமின்கள் நிறைந்த பீட்ரூட் - கேரட் சூப்

Published On 2022-04-28 05:26 GMT   |   Update On 2022-04-28 05:26 GMT
பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.
தேவையான பொருட்கள்  :

கேரட் - கால் கிலோ கேரட் நன்கு கழுவி மெலிதாய் வெட்டியது.
வெங்காயம் - 2
பீட்ரூட் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு -  5 பல்
காய்கறி சத்து நீர் - 7 கப்
உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு

செய்முறை :

கேரட்டை சுத்தம் செய்து தோல் நீக்கி மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.

பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பீட்ரூட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், இஞ்சி, பீட்ரூட் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வதக்கவும்.

இதனுடன் காய்கறி சத்து நீர் சேர்த்து மிக மிக நிதானமான சூட்டில் 25 நிமிடங்கள் பாத்திரத்தினை மூடி கொதிக்க விடவும்.

பின்னர் இதனை அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும் மிக்சியில் போட்டு நன்கு அரைத்து மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சிறிது நேரம் கொதிக்க விட்டு மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவும்.

சத்தான சுவையான பீட்ரூட் - கேரட் சூப் ரெடி.
Tags:    

Similar News