செய்திகள்
அலிபிரி நடைப்பாதை சீரமைப்பு பணி

அலிபிரி நடைபாதை சீரமைப்பு பணிகளால் பக்தர்கள் அவதி

Published On 2020-10-06 08:46 GMT   |   Update On 2020-10-06 08:46 GMT
திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லக்கூடிய அலிபிரி மலைப்பாதையில் நடைபெறும் சீரமைப்பு பணியால் பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திருப்பதி:

திருப்பதி அலிபிரியிலிருந்து திருமலை வரை உள்ள அலிபிரி நடைபாதை ரூ.25 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேற்கூரை அமைத்தல் குடிநீர், நவீன கழிப்பறை, பாதுகாப்பு அறை போன்றவை கட்டப்பட்டு வருகின்றன.

இதனால் தற்போதுள்ள மேற்கூரை முற்றிலுமாக இடிக்கப்பட்டு வருகிறது. இந்த வழியாக பக்தர்கள் காலணி இல்லாமல் நடந்து செல்கின்றனர். தினமும் ஆயிரம் பக்தர்களுக்கு மேல் நடந்து செல்கின்றனர்.

சீரமைப்பு பணியால் கீழே விழுந்து கிடக்கும் இரும்பு கம்பிகள், செங்கல், சிமெண்டு கற்களால் பக்தர்களுக்கு காயம் ஏற்படுகிறது.

எனவே மிகுந்த சிரமத்திற்கிடையே பக்தர்கள் இந்த வழியே நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

7.2 கி.மீ தூரம் வரை இந்த நடைபாதை வழிநெடுகிலும் கற்களும், கம்பிகளுமாக கிடக்கின்றன. இவற்றை உடனடியாக அகற்றி பாதையை சுத்தம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News