ஆன்மிகம்
சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரசாமி

பிரம்மோற்சவ விழா: சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரசாமி

Published On 2021-03-09 09:17 GMT   |   Update On 2021-03-09 09:17 GMT
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 7-வதுநாளான நேற்று காலை சூரிய பிரபை வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி,, சூரிய நாராயணமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதைத்தொடர்ந்து இரவு சந்திர பிரபை வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவில் கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News