செய்திகள்
கோப்புப்படம்

கோவில் நிர்வாகிகளுக்கு தீத்தடுப்பு பயிற்சி

Published On 2021-06-16 07:21 GMT   |   Update On 2021-06-16 07:21 GMT
தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பயிற்சியளித்தனர்.
உடுமலை:

உடுமலை தீயணைப்பு நிலையத்தில் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள அறநிலையத்துறை கோவில்களின் செயல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி முகாம் நடந்தது.

உடுமலை மாரியம்மன் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், கொழுமம் தாண்டேஸ்வரர் கோவில், வரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பணியாற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் அரிராமகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் தீயை வேகமாக அணைத்தல்,பரவாமல் தடுத்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளித்தனர்.

Tags:    

Similar News