ஆட்டோமொபைல்
டொயோட்டா

பெங்களூரு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் டொயோட்டா

Published On 2021-06-15 09:23 GMT   |   Update On 2021-06-15 09:23 GMT
டொயோட்டா நிறுவனத்தின் பிடாடி ஆலையில் ஒவ்வொரு நாளும் 50 சிலிண்டர்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.


டொயோட்டா நிறுவனம் தனது பிடாடி உற்பத்தி ஆலையின் கம்யூனிட்டி ஹெல்த் சென்டரில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்திக்கென டொயோட்டா அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது.



இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையம் நவம்பர் மாத வாக்கில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. 

இதற்கென டொயோட்டா நிறுவனம் ரூ. 12 கோடி முதலீடு செய்து இருக்கிறது. இந்த ஆலை ஒவ்வொரு நாளும் 50 சிலிண்டர்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் ராம்நகரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட இருக்கிறது. 
Tags:    

Similar News