செய்திகள்
விக்கெட் வீழ்த்திய அர்ஷ்தீப்பை பாராட்டும் சக வீரர்கள்

ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது பஞ்சாப்

Published On 2020-10-24 18:16 GMT   |   Update On 2020-10-24 18:19 GMT
துபாயில் நடைபெற்ற ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
துபாய்:

ஐபிஎல் கிரிக்கெட்டின் 43-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 
 
இதையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல், மந்தீப் சிங் ஆகியோர் களமிறங்கினர்.

மந்தீப் சிங் 17 ரன், கிறிஸ் கெயில் 20 ரன், கேஎல் ராகுல் 27 ரன், மேக்ஸ்வெல் 12 ரன்னிலும் வெளியேறினர்.

அடுத்துவந்த நிக்கோலஸ் பூரன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் வந்த தீபக் ஹூடா, கிரிஸ் ஜோர்டனும் அடுத்தடுத்து வெளியேறினர். 

இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. நிக்கோலஸ் பூரன் 32 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ஐதராபாத் அணியின் சந்தீப் சர்மா, ஜேசன் ஜோல்டர், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணியின் டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இதனால் பவர்பிளே முடிவில் ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்தது.

வார்னர் 35 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 19 ரன்னிலும் அவுட்டாகினர். அப்துல் சமத் 7 ரன்னில் வெளியேறினார். 

தொடர்ந்து ஆடிய மணீஷ் பாண்டே 15 ரன்னிலும், விஜயசங்கர் 26 ரன்னிலும் ஜேசன் ஹோல்டர் 5 ரன்னிலும் அவுட்டாகினர். ரஷீத் கான், சந்தீப் சர்மா டக் அவுட்டாகினர்.

இறுதியில் ஐதராபாத் அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணியின் 5-வது வெற்றி ஆகும்.

பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் மற்றும் கிறிஸ் ஜோர்டான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
Tags:    

Similar News