ஆட்டோமொபைல்
அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி

பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள்களை வெளியிடும் டி.வி.எஸ். மோட்டார்

Published On 2019-11-05 09:18 GMT   |   Update On 2019-11-05 09:18 GMT
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியீட்டிற்கு முன் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி மற்றும் அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி மாடல்களின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகின.

முதற்கட்டமாக பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்து அதன்பின் ஸ்கூட்டர்களை பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்ய டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் பி.எஸ். 4 மாடல்களை விட பி.எஸ். 6 மாடல்களின் விலை 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகமாக நிர்ணயிக்கப்படலாம்.



தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி மாடல் முதலில் பி.எஸ். 6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

யமஹா, ஹீரோ மற்றும் ஹோண்டா போன்ற நிறுவனங்களும் தங்களின் பி.எஸ். 6 வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. கடந்த மாதம் ஹோண்டா நிறுவனம் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் ஆக்டிவா ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

புதிய பி.எஸ். 6 புகை விதகள் மூலம் நாடு முழுக்க காற்று மாசு அளவை பெருமளவு குறைக்க முடியும். இதற்கான காலக்கெடு ஏப்ரல் 1, 2020 ஆகும்.
Tags:    

Similar News