செய்திகள்
முக ஸ்டாலின்

டாஸ்மாக் திறப்பு ஏன்?- விளக்கம் அளித்த முதலமைச்சர்

Published On 2021-06-12 07:45 GMT   |   Update On 2021-06-12 07:45 GMT
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சேலம்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* மேட்டூர் அணையை ஆண்டுதோறும் ஜூன் 12ந்தேதி திறந்து வைப்பதில் அரசு உறுதியாக உள்ளது.



* மேட்டூர் அணை தண்ணீர் கடைமடை பகுதி வரை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


* நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி உணவுத்துறையில் தமிழகம் சாதனை படைக்கும்.

* பயிர் சாகுபடி பரப்பளவை 75% அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழகத்தில் கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

* கொரோனா குறைந்ததால்தான் டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது.

* டெல்லியில் வரும் 17ந்தேதி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News