உள்ளூர் செய்திகள்
ஆரணியில் அடுத்தடுத்து 3 இடங்களில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

3 இடங்களில் கொள்ளை முயற்சி

Published On 2022-01-12 07:04 GMT   |   Update On 2022-01-12 07:04 GMT
ஆரணியில் அடுத்தடுத்து 3 இடங்களில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
ஆரணி, ஜன. 12-
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கே.கே. நகர் மெயின் ரோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் மகேஸ்வரி (வயது 62). இவருக்கு கிருஷ்ணகுமார் (34) என்ற மகனும், சத்யா என்ற மகளும்  உள்ளனர். மகனும், மகளும் சென்னையில் வசித்து வருகின்றனர்.

இவர்களை பார்ப் பதற்காக மகேஸ்வரி நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர் கள் நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணகுமாருக்கு தகவல் தெரிவித்தார். சொந்த ஊருக்கு வந்த கிருஷ்ணகுமார் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் குப்பம்மாள் (65). சில மாதங்களுக்கு முன்பு கணவன் இறந்ததால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் நேற்று ஆரணி பாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டுக்குள் கொள்ளை யர்கள் புகுந்துள்ளனர். 

பணம், நகை ஏதும் இல்லாததால் திரும்பி சென்றனர். திரும்பி வந்த குப்பம்மாள் வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார்.

ஆரணி டவுன் புது காமூர் சாலையில் உள்ள அக்ரா பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிவேலு. இவருக்கு சொந்தமாக நூல் ஆலை ஒன்று உள்ளது. வழக்கம் போல் இந்த நூல் ஆலையை நேற்றிரவு பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் வழக்கமாக இன்று திறப்பதற்காக வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்தது. ஆனால் எந்த பொருட்களும் திருடு போகவில்லை. இதுகுறித்து முனிவேலு ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார். 

இந்த 3 கொள்ளை முயற்சி புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகைகளை பதிவு செய்தனர்.

ஆரணி டவுன் பகுதியில் அடுத்தடுத்து 3 இடங்களில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News