உள்ளூர் செய்திகள்
வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக செய்தித்துைற அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்த காட்சி.

காங்கயம் நகராட்சியில் ரூ.81 லட்சத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணி தொடக்கம்

Published On 2022-05-05 10:07 GMT   |   Update On 2022-05-05 10:07 GMT
ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்.
காங்கயம்:

காங்கயம் நகராட்சிக்கு  உட்பட்ட  பகுதிகளில் ரூ. 81 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் அமைப்பது உள்ளிட்ட வளா்ச்சி திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

காங்கயம் நகராட்சி 1 -வது வாா்டுக்கு உள்பட்ட ஏசி நகரில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்டும் பணி, 10 -வது வாா்டு பங்களாப்புதூா் பகுதியில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் 20 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி உள்பட 14 வாா்டுகளுக்கும் மேற்பட்ட பகுதிகளில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்  எஸ்.வினீத், நகா்மன்றத் தலைவா் ந. சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், நகராட்சி பொறியாளா் ம.திலீபன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News