செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அருகே பயணிகள் நிழற்குடையை பாராக மாற்றிய குடிமகன்கள்

Published On 2021-09-15 06:51 GMT   |   Update On 2021-09-15 06:51 GMT
அவரப்பாளையம் நிழற்குடையில் குடிமகன்கள் குடித்து விட்டு கண்ணாடி பாட்டில்கள்,டம்ளர்கள் உள்ளிட்டவற்றை, போட்டுச் செல்கின்றனர்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையத்தில் பயணிகள் நிழற்குடை அமைந்துள்ளது. 

அந்த நிழற்குடையில், குடிமகன்கள் குடித்து விட்டு கண்ணாடி பாட்டில்கள், டம்ளர்கள், உள்ளிட்டவற்றை போட்டுச் செல்கின்றனர். இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். 

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

அவரப்பாளையம் நிழற்குடையில் குடிமகன்கள் குடித்து விட்டு கண்ணாடி பாட்டில்கள், டம்ளர்கள் உள்ளிட்டவற்றை, போட்டுச் செல்கின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தோம். போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்தனர்.

ஆனாலும் குடிமகன்களின் பிடியிலேயே இன்னும் நிழற்குடை உள்ளது. மேலும் நிழற்குடை கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. எனவே நிழற்குடையை பராமரித்து குடிமகன்களிடம் இருந்து மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News