செய்திகள்
அப்பாவு, இன்பதுரை

ராதாபுரம் தேர்தல் வழக்கு- மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை நீட்டிப்பு

Published On 2019-10-25 06:16 GMT   |   Update On 2019-10-25 06:16 GMT
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடை நவம்பர் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ராதாபுரம் தொகுதியில் இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும், 19, 20 மற்றும் 21வது சுற்றில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மீண்டும் எண்ண உத்தரவிட்டது. அதன்படி கடந்த 4-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

ஆனால், இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட அக்டோபர் 23-ம் தேதிவரை இடைக்கால தடை விதித்தனர். 



மேலும் இன்பதுரையின் மனு தொடர்பாக திமுக வேட்பாளர் அப்பாவு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், மறுவாக்கு  எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நவம்பர் 13-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு மீதான விசாரணையும் நவம்பர் 13-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News