ஆன்மிகம்
தவழும் கண்ணன்

குழந்தை வரம் அருளும் தவழும் கண்ணன்

Published On 2020-08-13 04:54 GMT   |   Update On 2020-08-13 04:54 GMT
புத்திர பாக்கிய தடை உள்ளவர்கள், கர்நாடக மாநிலம் தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் ஆலயம் வந்து நவநீத கிருஷ்ணனுக்கு தொட்டில் கட்டி வெண்ணைய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபட்டால் பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
குழந்தை வரம் அருளும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் தமிழ்நாட்டில் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை ஆலயமும், கர்நாடக மாநிலத்தில் தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் ஆலயமும் முக்கியமானவைகளாக அறியப்படுகின்றன.

ஆயர்பாடியில் சிறுகுழந்தை வடிவில் தவழ்ந்த அதே திருக்கோலத்தில், தொட்டமளூர் திருத்தலத்தில் அருள்கிறான், கண்ணன்.அடுத்து பிரகார வலம் வருகையில் கிழக்கு பார்த்தவண்ணம் கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு, குழந்தை கிருஷ்ணர் தலையை திருப்பி தவழும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

நவநீத கிருஷ்ணன் சன்னிதி அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டு உள்ளது. புத்திர பாக்கிய தடை உள்ளவர்கள், இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு தொட்டில் கட்டி வெண்ணைய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். புத்திரப் பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன் சமர்ப்பிப்பவர்கள் ஏராளம்.

பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலை யில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சென்னப்பட்டினா என்னும் ஊரில் இருந்து, 3 கிலோமீட்டர் தூரம் சென்றால் தொட்டமளூரை அடையலாம். சென்னை - மைசூர் ரெயிலில் சென்று சென்னபட்டினா ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் பயணம் செய்தால் பத்து நிமிடத்தில் கோவில் வாசலில் இறங்கலாம்.
Tags:    

Similar News