செய்திகள்
கோப்புபடம்

விஜயதசமியை முன்னிட்டு சிறுவர்களுக்கு சமஸ்கிருத வகுப்பு

Published On 2021-10-09 07:22 GMT   |   Update On 2021-10-09 07:22 GMT
வாரம்தோறும் ஒரு முறை தொலை தூரக் கல்விக்கான வகுப்புகள் நடக்கிறது. தேர்வுகள் 4 நிலைகளாக உள்ளன.
திருப்பூர்:

திருப்பூரில் உள்ள சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பில் விஜயதசமியை முன்னிட்டு சிறுவர்களுக்கான சமஸ்கிருத வகுப்புகள் நடக்க உள்ளது. சிறிய ஸ்லோகங்கள், பாடல்கள், எளிதில் சமஸ்கிருதம் பேச வகுப்புகள் 1.5 மாதம் நடக்கிறது.

இந்த வகுப்பில் 8 வயது முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்கள் பங்கேற்கலாம். வகுப்பு முடிந்த பின் சமஸ்கிருத பாரதி சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும். வாரம் தோறும் ஒரு முறை தொலைதூரக் கல்விக்கான வகுப்புகள் நடக்கிறது. தேர்வுகள் 4 நிலைகளாக உள்ளன. 

ஒவ்வொரு தேர்வுகளுக்கும் 6 மாதம் வகுப்புகள் நடக்கும். இதில் பங்கேற்க குறைந்தபட்சம் 13 வயது இருக்க வேண்டும். சான்றிதழ்கள் தேர்வுக்கு பின் தரப்படும். விவரங்களை அறிந்து கொள்ள திருப்பூர் சமஸ்கிருத பாரதி ஒருங்கிணைப்பாளரை 93632 - 22184  என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News