உள்ளூர் செய்திகள்
திம்மராய பெருமாள் கோவில்.

மத்தூர் அருகே திம்மராய பெருமாள் கோயில் திருவிழாவுக்கு திடீர் எதிர்ப்பு கிராம மக்கள் போலீசில் புகார்

Published On 2022-04-15 07:49 GMT   |   Update On 2022-04-15 07:49 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே திம்மராய பெருமாள் கோவில் திருவிழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்பினர் மீது கிராம மக்கள் போலீசில் புகார் செய்தனர்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே திம்மராய பெருமாள் கோவில் திருவிழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்பினர் மீது கிராம மக்கள் போலீசில் புகார் செய்தனர்.
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம்  அருகே உள்ள மாதம்பதி பகுதியில் ஸ்ரீ திம்மராய பெருமாள் சுவாமி, வீரபத்திர சுவாமி ஆகிய பிரசித்தி பெற்ற கோயில்களின் திருவிழா மாதம்பதி, சந்தம்பட்டி, மூங்கம்பட்டி, முருக்கம்பட்டி, கொல்லப்பட்டி, குல்லம்பட்டி, படவானூர், பொஜ்ஜனூர் , பனைமரத்துப்பட்டி, குருவப் பட்டி, கோர்லப்பட்டி, கந்த கவுண்டனூர், வீராட்சி குப்பம் உள்ளிட்ட 18 கிராமங்களை  சேர்ந்த கிராம பொதுமக்கள் ஒன்று கூடி மூதாதியர் காலத்தில் இருந்து சுமார் 150 வருடங்களாக   சித்ரா பவுர்ணமி இவ்விரு கோவில்களின் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில்  வீராட்சிகுப்பம் பகுதியை சேர்ந்த கோவில் நிர்வாகியான வீரபத்திரன் உள்பட பொதுமக்கள் மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:&

இக்கோவில்களின் திருவிழா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக நடைபெறவில்லை. தற்பொழுது தமிழக அரசு கொரோனா தடையை நீக்கி முழுதளர்வு அளித்து நிலையில் மீண்டும் ஸ்ரீ திம்மராய பெருமாள் சுவாமி, வீரபத்திர சுவாமி கோயில்களின் திருவிழா சித்ரா பௌர்ணமி அன்று செய்ய முடிவு செய்து வந்த நிலை யில் மாதம்பதி பகுதியை சேர்ந்த சில நபர்கள் கோயில் எங்கள் ஊரில் உள்ளதால் திருவிழா செய்ய தடை விதித்து வரு கின்றனர்.

அப்படி திருவிழா செய்தால்  தங்களுக்கு தான் முழு உரிமையும் அத்துடன் தங்கள் தலைமையில் தான் நடைபெற வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மற்ற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை தகாத வார்த்தை களால் திட்டி கோயில் திருவிழா செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News