செய்திகள்
மம்தா- மோடி

கேரளம், அசாம் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Published On 2021-05-02 02:50 GMT   |   Update On 2021-05-02 02:50 GMT
கேரளம், அசாம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்தல் ஆணையம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து கேரளம், அசாமில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

கேரளாவில் 140 தொகுதிகளுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆட்சி அமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையே மும்முனைப் போட்டி உள்ளது.

அசாமில் 126 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்க 64 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அசாமில் ஆளும் பாஜக கூட்டணிக்கும், எதிா்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News