லைஃப்ஸ்டைல்
பேபி கார்ன் காளான் சூப்

பேபி கார்ன் காளான் சூப்

Published On 2020-09-17 04:23 GMT   |   Update On 2020-09-17 04:23 GMT
குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க விரும்பினால் பேபி கார்ன், காளான் சேர்த்து சூப் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பேபி கார்ன் - 1 கப்
தண்ணீர் - 4 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
முட்டைக்கோஸ் - சிறிதளவு
காளான் - 10
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
சோள மாவு கரைசல் - 4 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
உப்பு - சுவைக்க



செய்முறை

பேபி கார்னை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, ப.மிளகாய், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

காளானை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கவும்.

அடுத்து அத்துடன் பேபி கார்ன் மற்றும் காளான், உப்பு மற்றும் மிளகு சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை கலந்து கொள்ளவும்.

அதில் சோயா சாஸ், தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.

சோள மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் சேர்க்கவும்.

இந்த கலவை கெட்டியாக வரும்வரை கிளறி பின் அதில் கொத்தமல்லி இலை, முட்டைக்கோஸ் சேர்க்கவும்.
.
அடுப்பை நிறுத்திவிட்டு பின் சூடாக பரிமாறவும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News