செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் சரிவு

Published On 2019-11-07 10:12 GMT   |   Update On 2019-11-07 10:12 GMT
மழை ஓய்ந்ததால் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் சரியத் தொடங்கியுள்ளது.
கூடலூர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது. கேரளாவிலும் பெய்த கன மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது. ஆனால் தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் அணைக்கு நீர் வரத்து 620 கன அடியாக குறைந்துள்ளது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 1630 கன அடி நீர் திறக்கப்படுவதால் அணையின் நீர் மட்டம் 127.45 அடியாக குறைந்துள்ளது.

வைகை அணையின் நீர் மட்டம் 64.85 அடியாக உள்ளது. அணைக்கு 1419 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 1760 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55.10 அடியாக உள்ளது. 146 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.37 அடியாக உள்ளது. வருகிற 52 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. தேக்கடி 0.2, கூடலூர் 3.5, சண்முகா நதி அணை 2, மருதாநதி 7.9 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News