தொழில்நுட்பம்
ரயில்

சிறப்பு ரயில்களில் பயணம் செய்வோர் இந்த செயலியை இன்ஸ்டால் செய்வது கட்டாயமானது

Published On 2020-05-12 09:51 GMT   |   Update On 2020-05-12 09:51 GMT
இந்தியாவில் சிறப்பு ரயிலில் பயணம் செய்வோர் இந்த செயலியை கட்டாயம் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தியாவில் சிறப்பு ரயில்களில் பயணம் செய்வோர் மத்திய அரசு வெளியிட்ட ஆரோக்யசேது செயலியை இன்ஸ்டால் செய்வதை மத்திய ரயில்வே அமைச்சகம் கட்டாயமாக்கி இருக்கிறது. எனினும், ஒவ்வொருத்தர் சூழலுக்கு ஏற்ப விலக்கு அளிப்பது பற்றி முடிவு எட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் முக்கிய நகரங்களில் செல்லும் சிறப்பு ரயில்கள் பற்றி அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆரோக்யசேது செயலி இன்ஸ்டால் செய்வது கட்டாயம் என குறிப்பிடப்படவில்லை. எனினும், மத்திய ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஆரோக்யசேது செயலி இன்ஸ்டால் செய்வது கட்டாயம் என தெரிவித்துள்ளது.



'தேசிய ஊரடங்கின் போதும் இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க இருக்கிறது. இதில் பயணம் செய்வோர் ஆரோக்யசேது செயலியை தங்களது மொபைல் போன்களில் இன்ஸ்டால் செய்வது கட்டாயமாகிறது', என மத்திய ரயில்வே அமைச்சக ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய மொபைல் போன் நம்பர் அவசியம் என்பதால், அனைத்து பயணிகளும் மொபைல் வைத்திருப்பர். இதன் காரணமாக ஆரோக்யசேது செயலி இன்ஸ்டால் செய்வது கட்டாயமாகிறது என ரயில்வே துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
Tags:    

Similar News