உள்ளூர் செய்திகள்
கோவிலுக்கு வெளியே தரிசனம் செய்யும் பக்தரை படத்தில் காணலாம்.

கன்னியாகுமரியில் நாளை முதல் கோவில்களில் 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை

Published On 2022-01-13 09:47 GMT   |   Update On 2022-01-13 09:47 GMT
கன்னியாகுமரியில் நாளை முதல் கோவில்களில் 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
நாகர்கோவில்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 

பொங்கல் பண்டிகை யையொட்டி பொது இடங் களில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் நாளை 14-ந்தேதி முதல் 5 நாட்கள் கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளது. வழக்கமாக பொங்கல் பண்டிகை அன்று கோயில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். பொங்கல் பண்டிகையான நாளை கோயில்களில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

கன்னியாகுமரி பகவதியம் மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் நாளை வழக்கமான பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 18-ந்தேதி வரை கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில்களில் வழக்கமான பூஜைகளை செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
 
சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. கடற்கரைக்கு செல்லும் சாலை களில் தடுப்பு வேலி கள் அமைக்கப்பட்டு உள் ளது. அங்கு போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர். 

மாத்தூர் தொட்டில் பாலம், குளச்சல் பீச், சொத்தவிளை பீச் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து  சுற்றுலா தலங்களுக்கும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான நடவடிக் கையை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் காணும் பொங்கல் விழா கொண்டாடப்படும். அன்று குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் புதுமண தம்பதியினர் செல்வது வழக்கம். 

இந்த ஆண்டு சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் போலீசார் அந்த பகுதி யில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் மாவட்ட முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களை கண்காணிக்க கூடுதல் போலீசார் நியமிக் கப்பட்டுள்ளனர். 

16-ந்தேதி முழு ஊரடங்கு அன்று பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். முழு ஊரடங்கு அன்று 50 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News