செய்திகள்
சச்சின் டெண்டுல்கர், தோனி

2011ல் உலக கோப்பையை வென்றது சிறந்த தருணம் - சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

Published On 2020-08-15 17:28 GMT   |   Update On 2020-08-15 17:28 GMT
2011 இல் நாம் உலகக் கோப்பையை வென்றது எனது வாழ்க்கையின் சிறந்த தருணம் என சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
நாடு முழுவதும் 74-வது சுதந்திர தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது மறக்க முடியாத சுதந்திர தினமாகும்.  ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தல தோனியும்,  சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் அறிவித்துள்ள செய்தி.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி இன்று மாலை அறிவித்துள்ளார்.  மேலும் தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார்.  இன்று மாலை 7.29 மணியில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

2004ல் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலம் அறிமுகமானார் தோனி.  39 வயதான மகேந்திரசிங் தோனி , 350 ஒரு நாள் போட்டிகளிலும், 90 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.  350 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 10,773 ரன்கள் சேர்த்துள்ளார்.  98 டி20 போட்டிகளில் 1,617 ரன்களும், 90 டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்களும் சேர்த்துள்ளார்.  

இதற்கிடையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் தல தோனியை தொடர்ந்து சின்ன தல சுரேஷ் ரெய்னாவும்  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   

முழு மன நிறைவுடன் தோனி வழியை தேர்ந்தெடுப்பதாக இந்திய அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.   சுரேஷ் ரெய்னா 226 ஒருநாள் போட்டிகள், 78 டி20 மற்றும் 19 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  226 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா 5617 ரன்களை சேர்த்துள்ளார்.  

இந்நிலையில் 2011ல் உலக கோப்பையை வென்றது சிறந்த தருணம் என சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தோனியின் ஓய்வு குறித்து அவர் கூறியதாவது. 2011 இல் நாம் உலகக் கோப்பையை வென்றது எனது வாழ்க்கையின் சிறந்த தருணம் எனவும், உலகக் கோப்பை வென்றது என் வாழ்வில் மறக்க முடியாதது என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.  மேலும் இந்திய கிரிக்கெட்டில் தங்களின் பங்களிப்பு மகத்தானது என தோனிக்கு சச்சின் டெண்டுல்கர்  புகழாரம் சூட்டியுள்ளார்.

வாழ்க்கையின் 2வது அத்தியாயத்தில் சிறப்பாக செயல்பட தோனிக்கு தனது வாழ்த்துகளை  சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள் தல தோனி மற்றும் சின்ன தல சுரேஷ் ரெய்னா இருவரும் வெளியிட்டுள்ள இந்த ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News