செய்திகள்
கோப்புப்படம்

ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நல விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

Published On 2021-02-19 14:32 GMT   |   Update On 2021-02-19 14:32 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நல விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:

நடப்பு கல்வி ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். இவ்விடுதிகளில் சேர்வதற்கு மாணவ-மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும், தற்போது அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மீண்டும் அரசிடம் இருந்து ஆணைகள் பெறப்பட்டவுடன் இதர வகுப்பு மாணவ-மாணவிகளின் சேர்க்கை குறித்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும்.

இதில் மாணவர்களுக்கு தங்களது இருப்பிடத்திற்கும், பள்ளிக்கும் இடைவெளி 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இந்த விதி பொருந்தாது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தாங்கள் சேரும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று, சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் வருகிற 25-ந்தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News