தொழில்நுட்பம்
கேலக்ஸி எஸ்20 சீரிஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிசும் இப்படி தான் வெளியாகும்?

Published On 2020-12-10 04:02 GMT   |   Update On 2020-12-10 04:02 GMT
சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் வழியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர் வழங்கப்படாது என கூறப்படுகிறது. பிரேசில் நாட்டு டெலிகாம் நிறுவன வலைதளத்தில் இருந்து லீக் ஆன விவரங்களில் இந்த தகவல் இடம்பெற்று இருந்ததாக தெரிகிறது.

முன்னதாக ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன்களுடன் சார்ஜரை வழங்கவில்லை. இவ்வாறு செய்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்தது. ஐபோன் 7 சீரிஸ் துவங்கி ஹெட்போன் ஜாக்-ஐ ஆப்பிள் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் இந்த ஆண்டு சார்ஜர் இணைந்து கொண்டது. தற்சமயம் சாம்சங் நிறுவனமும் ஸ்மார்ட்போனுடன் சார்ஜரை வழங்காது என கூறப்படுகிறது. சார்ஜர் வழங்காத பட்சத்தில் சாம்சங் என்ன காரணத்தை தெரிவிக்கும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்21 மற்றும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் மாடல்களில் FHD+ ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் இவை பிளாஸ்டிக் பாடி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

புதிய கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் SM-G991U எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டின் போதே ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் லஹியானா எனும் குறியீட்டு பெயர் கொண்ட பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த பிராசஸர் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் ஆக இருக்கும் என தெரிகிறது. புதிய ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு அறிமுகமான ஸ்னாப்டிராகன் 865 பிராசஸரின் மேம்பட்ட சிப்செட் ஆகும்.

Tags:    

Similar News