தொழில்நுட்பம்
பில் கேட்ஸ் வைரல் புகைப்படம்

பெரும்பாலானோர் நம்பிய வைரல் பதிவு - இவர் தான் பில் கேட்ஸ் தந்தையா?

Published On 2019-12-04 07:05 GMT   |   Update On 2019-12-04 07:05 GMT
பில் கேட்ஸ் பற்றி சமூக வலைத்தளங்களில் வலம் வரும் வைரல் பதிவின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது மகளுடன் உணவகத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சிறுகதையுடன் சமூக வலைத்தளங்களில் நீண்ட காலமாக வைரலாகி வருகிறது.

வைரல் புகைப்படத்தில், பில் கேட்ஸ் உணவகம் ஒன்றில் உணவுக்கான கட்டணத்துடன் 5 டாலர்கள் டிப்ஸ் வழங்கினார். உடனே உணவு பரிமாறிய ஊழியர் பில் கேட்ஸ்-ஐ வினோதமாக பார்த்தார். பில் கேட்ஸ் என்ன ஆனது என கேட்டார். ஊழியர்: உங்களது மகள் 500 டாலர்கள் டிப்ஸ் வழங்கினார், உலக பணக்காரரான நீங்கள் வெறும் 5 டாலர்கள் வழங்கியுள்ளீர்கள் என கூறினார். இதற்கு சிரித்து கொண்டே பதில் அளித்த பில் கேட்ஸ், அவர் உலக பணக்காரரின் மகள், நான் மரம் வெட்டுபவரின் மகன். கடந்த காலத்தை என்றும் மறக்காதீர்கள், அது உங்களின் சிறந்த ஆசான்! என குறிப்பிடப்பட்டுள்ளது.




வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அதில் உள்ள தகவல்களில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் உண்மையில் நடைபெற்றதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், பில் கேட்ஸ் மரம் வெட்டுபவரின் மகன் இல்லை என உறுதியாகியுள்ளது.

பில் கேட்ஸ் தனது வாழ்க்கை குறிப்பில் தன் தந்தை வில்லியம் ஹெச். கேட்ஸ் என்பதும் அவர் வழக்கறிஞர் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக குழுவிலும் இடம்பெற்றிருக்கிறார் என பில் கேட்ஸ் குறிப்பிட்டு இருக்கிறார்.

பில் கேட்ஸ் தாயார் மேரி கேட்ஸ், வாஷிங்டன் ரீஜென்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் பில் கேட்ஸ் தந்தை பற்றிய உண்மை தெளிவாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Tags:    

Similar News