செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா பரிசோதனைக்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தால் புகார் அளியுங்கள்

Published On 2021-06-08 09:59 GMT   |   Update On 2021-06-08 09:59 GMT
கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் பட்சத்தில் பொது மக்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி:

புதுவை அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் கொரோனா பரிசோதனை அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு அனுமதி பெற்ற சில தனியார் பரிசோதனை கூடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தனியார் பரிசோதனை மையங்களில் பரிசோதனை கட்டணம் ஆர்.டி.பி.சி.ஆருக்கு ரூ.500-ம், ரட்டுக்கு ரூ.200-ம் மற்றும் பாதுகாப்பு கவச உடை, போக்குவரத்து, மாதிரிகள் சேகரிப்புக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் பட்சத்தில் பொது மக்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம். புகாருக்கு 0413-2229350 என்று எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

குறிப்பிட்ட தொகைக்கு மேல் வசூலிக்கும் மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள் மீதும் அரசு அனுமதி பெறாமல் பரிசோதனை செய்யும் தனியார் பரிசோதனை கூடங்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News