லைஃப்ஸ்டைல்
அஸ்வகந்தா தேநீர்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அஸ்வகந்தா தேநீர்

Published On 2021-01-01 05:23 GMT   |   Update On 2021-01-01 05:23 GMT
இந்த தேநீரை காலை, மாலை இரு வேளை பருகலாம். இதில் சேர்க்கப்படும் மூன்று பொருட்களுமே நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் மேம்பட செய்துவிடும்.
தேவையான பொருட்கள்: 

தண்ணீர் - 1 கப் , 
அஸ்வகந்த தூள் - 1 தேக்கரண்டி, 
எலுமிச்சை பழம் - பாதி, 
தேன் - சுவைக்கு ஏற்ப 

செய்முறை:

பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.

அதில் அஸ்வகந்தா பொடியைச் சேர்க்கவும், அல்லது நீங்கள் இரண்டு அஸ்வகந்த வேர்களைப் பயன்படுத்தலாம்.

மூடியை மூடி 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு இதனை ஒரு டம்ளரில் வடிகட்டி, சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து, உங்கள் சுவைக்கு ஏற்ப தேன் சேர்க்கவும்.

இந்த தேநீரை காலை, மாலை இரு வேளை பருகலாம். இதில் சேர்க்கப்படும் மூன்று பொருட்களுமே நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் மேம்பட செய்துவிடும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News