ஆட்டோமொபைல்

இந்தியாவில் சோதனை செய்யப்படும் மாருதி பலேனோ ஹைப்ரிட்

Published On 2019-04-06 11:04 GMT   |   Update On 2019-04-06 11:04 GMT
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் பலேனோ ஹைப்ரிட் கார் மாடலை சோதனை செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. #BalenoHybrid


 
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி பி.எஸ்.-VI ரக எமிஷன்களுக்கு பொருந்தும் வகையிலான கார்களை உற்பத்தி செய்ய தயாராகி வருகிறது. இந்தியாவில் ஏப்ரல் 1, 2020 ஆம் ஆண்டு முதல் பி.எஸ். VI ரக எமிஷன்களுக்கு உட்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும்.

இதற்கென மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை (SHVS) சுசுகி பயன்படுத்துகிறது. மாருதியின் SHVS தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் கார் என்ற பெருமையை மாருதி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் பெறும் என தெரிகிறது. 



மாருதி நிறுவனம் சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பலேனோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. சில காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் மேம்பட்ட பம்ப்பர்கள், புதிய அலாய் வீல் போன்ற அம்சங்களை கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து மாருதி பலேனோ ஹைப்ரிட் டெஸ்ட் கார் சோதனை செய்யப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் டாப் எண்ட் மாடல் எவ்வாறு காட்சியளிக்கும் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய காரின் பெரும் மாற்றம் காரில் ஸ்மார்ட் ஹைப்ரிட் பேட்ஜ் இடம்பெற்றிருக்கிறது. மைல்ட்-ஹைப்ரிட் SHVS சிஸ்டம் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

நன்றி: Cartoq
Tags:    

Similar News